சீனாவின் உள்நாட்டு உற்பத்தி சரிவு..
சீனாவில் இரண்டாவது காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 4.7 விழுக்காடு அளவுக்கு குறைந்திருக்கிறது. இது கடந்தாண்டைவிட மிகவும் குறைவாகும். அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 5.1 விழுக்காடாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அது குறைந்திருக்கிறது. முதல் காலாண்டில் வளர்ச்சி 5.3 விழுக்காடாக இருந்தது. கடந்த 5 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் உள்நாட்டு உற்பத்தி சரிந்துள்ளது. இது அந்நாட்டு வணிகத்தை மேலும் தொய்வடையச் செய்திருக்கிறது. பெருந்தொற்று பாதிப்பில் இருந்து சீனா மீண்டு வர போதுமான நடவடிக்கைகளை சீன அரசு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு நுகர்வு குறைவு, உற்பத்தியில் தொய்வு உள்ளிட்ட காரணிகளால் பொருளாதாரம் மீளமுடியாத அளவுக்கு குறைவான வளர்ச்சியை பெற்றுள்ளது சீனாவில். உள்கட்டமைப்பு மற்றும் பெரிய உற்பத்தி நிறுவனங்களில் கொடிகட்டி பறந்த சீனா தற்போது இரட்டை இலக்க வளர்ச்சியில் இருந்து சரிந்துள்ளது. சீனாவில் பணியாற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும் மிகமுக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவிய மோசமான கருத்து வேறுபாடுகளின் வெளிப்பாடாகவே சீனாவின் பொருளாதார நிலை மந்தமாக மாறியுள்ளது சீனாவில் தற்போது திட்டங்கள் வகுப்பதில் அதிக கவனம் தேவைப்படுவதாக முன்னணி நிதி ஆலோசனை நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் மற்றும் ஐஎம்எஃப் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.