சீனாவின் பொருளாதார நிலை மாற்றமா?
உலக நாடுகளை கொரோனா பெருந்தொற்று ஆட்டிப்படைத்த நிலையில், அனைத்து நாடுகளும் மெல்ல மெல்ல பொருளாதாரத்தில் இருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவின் வாடிக்கையாளர் பணவீக்கம் என்பது ஓரளவுக்கு தேறி வருவதாக அந்நாட்டு தரவுகள் தெரிவிக்கின்றன.ஓரளவு சமாளிக்கும் அளவுக்கு பொருளாதாரம் இருந்தாலும் முழுமையாக பாதிப்பில் இருந்து சீனாவால் மீண்டுவரமுடியவில்லை என்பதையே அந்நாட்டு தரவுகள் தெரிவிக்கின்றன. சீனாவில் உணவுப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால் அந்நாட்டில் வாடிக்கையாளர் பணவீக்க விகிதம் 0.8%ஆகஸ்ட்டில் உயர்ந்திருக்கிறது,.இதே நிலையில்தான் கடந்த மாதமும் இருப்பதாக அந்நாட்டு அரசு தரவுகள் கூறுகின்றன.
உற்பத்தியாளர்களுக்கான விலை என்பது இரண்டரை விழுக்காடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த சீன அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வந்தாலும் உள்நாட்டு தேவை அதிகரிக்கவில்லையாம். வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கை குறைந்தபடியே இருக்கிறதாம். கடந்த சில வாரங்களாக சீன பொருளாதாரம் நிலைபெற துவங்கியிருப்பதாகவும்,தொழில்துறை உற்பத்திகள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சீன மக்கள் விடுமுறை காலத்தில் பயணத்துக்காக அதிகம் வெளியே செல்வார்கள் என்று அரசு எதிர்பார்த்த நிலையில் மக்கள் வெளியூர்களுக்கு செல்லும் அளவு குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.சீனாவில் ரியல் எஸ்டேட் துறை பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. சீன பங்குச்சந்தைகள் 1.9%வரை சரிந்துள்ளது.பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க சீன அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. ஆனால் அவை பலன்தரவில்லை.கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்கவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா-சீனா இடையேயான உறவில் விரிசல் அதிகரித்து வருவதால், அமெரிக்காவின் ஒவ்வொரு நகர்வும் சீனாவுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அண்மையில் சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பும் சீனாவின் வளர்ச்சி விகிதம் 5.2%இல் இருந்து 5%ஆக குறைத்து மதிப்பிட்டது. அடுத்தாண்டு இது 4.5%இல் இருந்து 4.2%ஆக சரியும் என்றும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. சீனாவில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகள் குறைந்திருக்கிறது. சீன அரசு தரவுகள் அடுத்தவாரம் காலாண்டு முடிவுகளை வெளியிட இருக்கிறது. சீனாவின் உள்நாட்டு உற்பத்தி, தொழில்துறை தரவுகளும் அடுத்தவாரம் வெளியாக இருக்கிறது, வேலையில்லா திண்டாட்டம் குறித்த புள்ளிவிவரங்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.