இந்தியாவில் பார்டனரை தேடும் சீன நிறுவனம்..
சீனாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமாக SAICமோட்டார்ஸ் நிறுவனம் உள்ளது இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுடன் கைகோர்க்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஜேஎஸ் டபிள்யூ நிறுவனம்,MG நிறுவனத்தின் 48 விழுக்காடு பங்குகளை வாங்க ஆர்வம் காட்டுவதாக கடந்த ஜூன் மாதமே தகவல் வெளியானது. இந்நிலையில் MG நிறுவனத்தின் முக்கிய பங்கு நிறுவனமாக SAIC திகழ்கிறது.எனவே SAIC நிறுவனம் இந்தியாவின் சஜ்ஜன்ஜிண்டாலுடன் கைகோர்க்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இருநிறுவனங்களும் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. சில இந்திய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக மட்டும் சியாக் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வளர்ந்து வரும் வாகன சந்தையில் ஆதிக்கம் செலுத்தவே சீன நிறுவனம் விரும்புவதால் இந்தியாவில் முதலீடுகளை பெறவும், பார்ட்னர்கள் உதவியுடன் பெரிதாக வணிகம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.கடந்த 2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா வீரர்கள் இடையே நேர்ந்த மோதல் காரணமாக இருநாடுகளுக்கும் இடையே வணிகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 100க்கும் அதிகமான சீன நிறுவன செயலிகளும் தடை செய்யப்பட்டுள்ளன. பிரிட்டனை பூர்விகமாக கொண்ட MG நிறுவனம் இந்தியாவில் 5 வகையான கார்களை விற்பனை செய்து வருகிறது. இதற்கு உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை சியாக் நிறுவனமே தந்து வருகிறது. 2019ஆம் ஆண்டு இந்திய சந்தைகளுக்கு வந்த Mg நிறுவனம் கணிசமான கார்களை இந்தியாவில் விற்றுள்ளது.