$ 344 பில்லியன்களை இழந்த அலிபாபா நிறுவனம் !
கடந்த வருடம் சீன அரசின் நிதி அமைப்பு குறித்து அலிபாபா நிறுவனர் ஜாக் மா தனது விமர்சனத்தை வெளிப்படையாக முன்வைத்த போதே அவருடைய பங்குகளின் விலை கூடிய விரைவில் சரியும் என்று சிலருக்குப் புரிந்திருக்கும், இப்போது, அது உண்மையாகியுள்ளது, ஒரு செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி தொழில்நுட்ப நிறுவனத்தின் சந்தை மூலதனத்தில் 344 பில்லியன் டாலர்களை ஜாக்மாவின் அலிபாபா நிறுவனம் இழந்துள்ளது தெரிய வந்திருக்கிறது. அதன்பின் பீஜிங்கில் உள்ள பின் டெக் ஆம், ஏன்ட் குழுமத்தின் பட்டியலை இடை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னணியில் சீன அரசின் அழுத்தங்கள், வணிக நெறிமுறை நெருக்கடிகள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது, அலிபாபா நிறுவன பங்குகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் விலை குறைந்தது, பின்னர் 30 சதவீதம் உயர்த்த போதும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கிறது. இதனிடையே எதிர்வரும் நவம்பர் 5ஆம் தேதி தனது வருமான விவரங்களை அலிபாபா நிறுவனம் அறிவிக்க உள்ளது.