சிகரெட் விற்பனை – வருகிறது கட்டுப்பாடு!!!!!
புகையிலை பொருட்கள் உடல்நலத்துக்கு கேடு என்று கூறும் அரசு அதே புகையிலை பொருட்களுக்கு அதிக வரியும் வசூலிக்கிறது. புற்றுநோயை ஏற்படுத்தும் புகைப்பழக்கத்தை படிப்படியாக குறைக்க அனைத்து தரப்பு நடவடிக்கைகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக விரைவில் சில்லரையாக சிகரெட் விற்கத் தடை விதிக்க இருக்கிறது. அதாவது ஒரே ஒரு சிகரெட்டாக விற்பதால் அதனை பொதுமக்கள் மிகவும் எளிதாக வாங்கிக்கொள்ள முடிகிறது , இதனால் எத்தனை கட்டுப்பாடுகள் விதித்தாலும் சிகரெட் விற்பனை குறைந்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் சிகரெட்டை சில்லரையாக விற்கத் தடை விதித்துவிட்டால் சில்லரை விற்பனை தடைபட்டு, புழக்கம் குறையும் என்று அரசாங்கம் திட்டம் தீட்டி வருகிறது. ஆனால் ஒரு பாக்கெட் சிகரெட்டை விற்க எந்த தடையும் இல்லை என்றும் அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடைகளில் ஒரே ஒரு சிகரெட்டை விற்கத் தடையை நாடாளுமன்ற நிலைக்குழு முன்மொழிய இருப்பதாக கூறப்படுகிறது. தவறு என்பது மறந்து செய்வது.தப்பு என்பது அறிந்து செய்வது என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப புகைப்பழக்கம் தப்பு என தெரிந்து செய்வது முட்டாள்தனம்தானே… முடிந்தவரை புகைப்பழக்கத்தை தவிர்ப்போம்…உடல்நலம் காப்போம்