சிப்லா நிறுவனத்துக்கு சிக்கல்…
சிப்லாவின் சில பங்குகளை விற்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதற்கு முக்கிய காரணியாக புரோமோட்டர்களிடம் ஒரே இறுதியான முடிவு எட்டப்படவில்லையாம். புதிய இறுதி விலை எட்டப்படும் வரை ,குழப்பம் தொடர்ந்து வருகிறது.சிப்லா நிறுவனத்தின் புரோமோட்டர்கள் வசம் தற்போது வரை 33% வரை பங்குகள் உள்ளன. சிப்லா நிறுவனத்தின் உரிமையாளரின் குடும்பத்தினர் தங்கள் வசம் உள் மொத்த பங்குகளையும் விற்க முன்வருவதாகவும் ஆனால் புரோமோட்டர்கள் அதற்கு முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. எல்லா புரோமோட்டர்களும் பிரச்னை செய்யவில்லை என்றும் குறிப்பிட்ட 8%புரோமோட்டர்கள் மட்டுமே பிர்சனை செய்வதாகவும் கூறப்படுகிறது. புதிதாக ஒருவர் சிப்லா பங்குகளை பெரிதாக வாங்கும்பட்சத்தில் 59.4%சிப்லா பங்குகளை வாங்க இயலுமாம்.ரான்பாக்சி நிறுவனம் தொடர்பான பிரச்னையும் இதனால் தாமதமாகிறதாம். சிப்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில் புரோமோட்டர்களின் பங்கு மட்டும் 33,389 கோடி ரூபாயாக இருக்கிறது. சிப்லா நிறுவனத்தின் நிதி ஆலோசகர்கள், 5 பெரிய நிறுவனங்களிடம் பேசிவருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.டோரண்ட் மற்றும சிவிசி நிறுவனங்களை வாங்க முன்வந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 1935 ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம்,ஆப்ரிக்காவில் எச்.ஐவி நோயாளிகளுக்கு இணை மருந்து தயாரித்ததன் மூலம் பிரபலமடைந்திருந்தது.உலகம் முழுவதும் பிரபலமடைந்த சிப்லா நிறுவனம் தற்போது பங்குகளை விற்க முடியாமல் தடுமாறி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.