சிஎம்எஸ் இன்ஃபோசிஸ்டம்ஸ் IPO !
சிஎம்எஸ் இன்ஃபோ சிஸ்டம்ஸ் தனது ஐபிஓவினை டிசம்பர் 21ந் தேதி வெளியிடுகிறது. இந்நிறுவனமானது உலகளவில் மிகப்பெரிய ஏடிஎம் பண மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகும். சிஎம்எஸ் நிறுவனம் வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை வணிகத்திற்கான சொத்துகள் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளை நிறுவுதல், பராமரித்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.
அதன் பங்குகளை வாங்குமுன் கவனத்தில் கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்களை உங்களுக்கு தருகின்றோம்.
- ஐபிஓக்களின் மூன்று நாள் சலுகை டிசம்பர் 21 அன்று திறக்கப்பட்டு டிசம்பர் 23 அன்று நிறைவடைகிறது.
- ஒரு பங்கின் சலுகை விலை ரூ.205-216 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- சிஎம்எஸ் நிறுவனத்தின் ரூ. 1,100 கோடி அளவிலான 100% பங்குகளை சியோன் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் வைத்திருக்கும். தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு 50 சதவீத பங்குகளும், சில்லறை முதலீட்டாளர்களுக்கு 35 சதவீதமும், நிறுவன சாராத முதலீட்டாளர்களுக்கு. 15 சதவீத பங்குகளும் விற்பனை செய்யப்படும். ஐபிஓ வெளியீட்டிற்குப் பிறகு நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு 65.59 சதவீதமாகக் குறையும்.
- ஆஃபர் ஃபார் சேல்ஸ் என்ற முறையில் பங்குகளை விற்பனை செய்வதற்கான சலுகையை செயல்படுத்த மற்றும் பலன்களைப் பெறவும் நிறுவனம் இந்த பங்குகளை விற்பனை செய்கிறது.
- குறைந்தபட்சம் 69 பங்குகளுக்கு ஏலம் எடுக்கலாம். அதன் பிறகு 69 மடங்குகளில் ஏலம் எடுக்கலாம். சில்லறை முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ரூ.14,904 மற்றும் அதிகபட்சமாக ரூ.1,93,752 வரை 13 லாட்களில் முதலீடு செய்யலாம்.
- பங்குகளின் ஒதுக்கீடு டிசம்பர் 28 ஆம் தேதிக்குள் முடிவு செய்யப்படும்; பங்கு கிடைக்காத முதலீட்டாளர்கள் டிசம்பர் 29 ஆம் தேதிக்குள் பணத்தைத் திரும்பப் பெறுவார்கள். மற்றும் வெற்றிகரமான ஏலதாரர்கள் டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் தங்கள் டிமேட் கணக்குகளில் பங்குகளைப் பெறுவார்கள். சிஎம்எஸ்ஸின் பங்குகள் டிசம்பர் 31 ஆம் தேதி பிஎஸ்இ மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்.