அளவில் சுருங்கும் காக்னிசண்ட்,இன்போசிஸ், விப்ரோ..
இந்தியாவில் ஹைப்ரிட் வேலை செய்யும் முறை மற்றும் குறைந்து வரும் டெக் பணியாளர்களால் இந்தியாவின் முன்னணி டெக் நிறுவனங்கள் தங்கள் அலுவலக இடங்களை குறைத்து வருகின்றன. குறிப்பாக காக்னிசண்ட்,இன்போசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் இதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் இந்த மூன்று நிறுவனங்களும் 103.2 மில்லியன் சதுரடி நிலத்தை மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. இது கடந்தாண்டு 107.25 மில்லியன் சதுரடியாக இருந்தது. காக்னிசண்ட் நிறுவனத்தின் அலுவலக இடம் 2.76 மில்லியன் சதுரடி கடந்தாண்டில் குறைந்திருக்கிறது. விப்ரோவின் அலுவலக இடமானது 24.97 மில்லியன் சதுரடியில் இருந்து 1.06 மில்லியன் சதுரடி குறைந்து 26.03 மில்லியன் சதுரடியாக மாறியுள்ளது. 185 மார்கெட்டிங் அலுவலகங்களை அடைத்துவிட்டது. பெங்களூருவை அடிப்படையாக கொண்டு இயங்கும் இன்போசிஸ் 11 அலுவலகங்களை குறைத்துவிட்டது. இதனால் அவர்களிடம் தற்போது 265 அலுவலகங்கள் மட்டுமே இருக்கிறது. கொரோனாவுக்கு பிறகு அலுவலக கட்டடங்களில் இடப்பற்றாக்குறை இல்லாமல் ஹைப்ரிட் மோடில் வேலை நடப்பதாகவும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நொய்டாவை தலைமையிடாமாக கொண்டு இயங்கும் எச்சிஎல் நிறுவனம் மட்டுமே புதிதாக பணியாளர்களை சேர்த்துள்ளது. உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களான ஆல்பஃபெட், மெட்டா, ஆகிய நிறுவனங்களே அலுவலக இடங்களை தேவையில்லாமல் இருந்தால் அதை குறைத்து வருகின்றன. இதனை காப்பியடிக்கும் வகையில்தான் இந்த நடவடிக்கையில் இந்திய நிறுவனங்கள் இறங்கியுள்ளன. கடந்தாண்டு டிசிஎஸ் நிறுவனம் 3,100 கோடி ரூபாயை உலகளவில் உள்ள 307 அலுவலகங்களை நிர்வகிக்க மட்டுமே செலவு செய்துள்ளது. விப்ரோ நிறுவனம் கடந்தாண்டு 1,455 கோடி ரூபாயை கட்டட நிர்வாகத்துக்கு மட்டுமே செலவிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை குறைக்க காக்னிசண்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் ரியல் எஸ்டேட் துறையிலும் பெரிய தாக்கம் காணப்படுகிறது.