மனக்கணக்கு போடும் காக்னிசண்ட்..!!
நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்ட காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப்பரேஷன் நடப்பு ஆண்டில் அதன் முழு ஆண்டு வருமானம் 8.5-11.5% அதிகரித்து 20.0-20.5 பில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. இது அதன் மிக உயர்ந்த வருடாந்திர வருவாய் என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நியூ ஜெர்சியை தளமாகக் கொண்ட டீனெக், டிசம்பருடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் அதன் வருவாய் 4.8 பில்லியனாக உயர்ந்துள்ளது . ஒப்பிடுகையில், டிசம்பர் காலாண்டில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) டாலர் வருவாய் ஆண்டுதோறும் 15.4% அதிகரித்து 6.52 பில்லியன் டாலராகவும், இன்ஃபோசிஸ் லிமிடெட் 21.5% அதிகரித்து 4.25 பில்லியன் டாலராகவும் இருந்தது என்றும் தெரிகிறது.
இரட்டை இலக்க வளர்ச்சிக்கு திரும்பிய காக்னிசண்ட்:
காக்னிசண்ட் நிறுவனம் 2021- ஆம் ஆண்டில், வருவாயில் 10% ஆண்டுக்கு வளர்ச்சியை கண்டு $18.5 பில்லியனாக அறிவித்தது. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு, காக்னிசண்ட் நிறுவனம் முதல் முறையாக இரட்டை இலக்க வருடாந்திர வருவாய் வளர்ச்சிக்கு திரும்பியுள்ளது.
ஹெல்த்கேர் வாடிக்கையாளர்களிடையே வருவாய் வளர்ச்சி ஒருங்கிணைந்த மென்பொருள் தீர்வுகளால் உந்தப்பட்டது. அதன் வருடாந்திர வருவாய் வளர்ச்சி 8.2% வளர்ச்சியடைந்துள்ளது.
காக்னிசண்ட் நிறுவனம் தகவல்:
2021-ஆம் ஆண்டில் 33,000 புதிய பட்டதாரிகளை இந்தியாவில் வேலைக்கு அமர்த்தியுள்ள காக்னிசன்ட் அதன் உலகளாவிய பணியாளர்களின் எண்ணிக்கையை 330,600-ஆக உயர்த்தியதாகவும் தெரிவித்துள்ளது.