சரிந்து விட்ட தங்கம்..
தசரா பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் இந்திய சந்தைகளுக்கு அக்டோபர் 24ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 23ஆம் தேதி பங்குச்சந்தைகள் மிகப்பெரிய சரிவை கண்டிருந்தது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 825 புள்ளிகள் குறைந்து 64,571.88 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையிலும் 260 புள்ளிகள் வீழ்ந்து 19,281 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஒரு கிராம் தங்கம் 5675 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 45ஆயிரத்து 400 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு,50 காசுகள் குறைந்து 78 ரூபாயாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 78ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் 3%ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும். இவற்றில் ஜிஎஸ்டி நிலையானது. ஆனால் செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.