சரிந்து முடிந்த பங்குச்சந்தைகள்..
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை இந்திய சந்தைகளில் பெரிய சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 365 புள்ளிகள சரிந்து 65322 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 114 புள்ளிகள் வீழ்ந்து 19428 புள்ளிகளாக வணிகம் முடிந்தது. பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தவிர மற்ற பங்குகளை கடைசி நேரத்தில் பலரும் விற்பனை செய்ததால் இந்த நிலை ஏற்பட்டது. தொடக்கம் முதலே சரிவை சந்தித்த இந்திய சந்தைகள் நாள் முழுவதும் ஊசலாட்டத்துடனே இருந்து வந்தது.IndusInd Bank, NTPC, SBI Life Insurance, Divis Labs உள்ளிட்ட நிறுவனங்கள் பெரிய நஷ்டத்தை சந்தித்தன. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், HCL Technologies, Titan Company, Power Grid Corporation, UltraTech Cement உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் மட்டுமே 1.2% லாபத்தை பதிவு செய்தன. NCC, Jindal Steel & Power, Jindal Steel & Power, Exide Industries, Coforge, Cupid, Wonderla Holidays, NBCC, Raymond, Suzlon Energy, Texmaco Rail & Engineering, Welspun India உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டன. தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ந்து வருகிறது. கடந்த 8ஆம் தேதி விலையுடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் 11ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் 55 ரூபாய் விலை குறைந்துவிட்டது. ஒரு கிராம் தங்கம் 5485 ரூபாயாகவும் , 43ஆயிரத்து 880 ரூபாயாகவும் ஒரு சவரன் தங்கம் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி முன்தின விலையான 76 ரூபாய் 20 காசுகளுக்கும்,கட்டிவெள்ளி கிலோ 76 ஆயிரத்து 200 ரூபாயாகவும் விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு எல்லா கடைகளிலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும், ஆனால் சில கடைகளில் அதிக செய்கூலி, சில கடைகளில் குறைந்த செய்கூலி சேதாரம் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், தங்கம் விலை சவரன் 44ஆயிரம் ரூபாய்க்கு கீழ் சென்றுள்ளது நடுத்தர மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.