கருத்து தெரிவித்த வால்மார்ட் நிறுவனம்!!!!
பிளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவில் வெற்றிகரமாக தொடங்கப்பட்ட முக்கியமான நிறுவனங்களில் ஒன்று. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பிளிப்கார்ட் நிறுவனத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வால்மார்ட் நிறுவனம் பெரிய தொகையை முதலீடு செய்தது. அதாவது 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து 77% பங்குகளை வால்மார்ட் வாங்கியது.
இந்த நிலையில் பிலிப்கார்ட் நிறுவனத்தின் ஆரம்ப பங்கு வெளியீடு , நீண்டகால இலக்கை கொண்டுள்ளதாக வால்மார்ட் தெரிவித்துள்ளது. புளூம்பர்க் நிறுவன தரவுகளின்படி, 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை டைகர் குளோபல் மேனேஜ்மன்ட் நிறுவனத்தின் மீதமுள்ள பங்குகளை வாங்க வால்மார்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பிலிப்கார்ட் நிறுவனத்தின் பங்கு 2021-இல் 38 பில்லியன் டாலராக இறருந்தது. 2023இல் தற்போது 35 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்துள்ளது. இந்தியாவில் தங்கள் வருங்கால முதலீடுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிளிப்கார்ட் நிறுவனம், வெற்றிகரமான வணிகத்தை மேற்கொள்ள இருப்பதாக கூறியுள்ளது. அமெரிக்க நிறுவனமான அமேசான் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வந்த அதே காலக்டத்தில் மற்றொரு அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் இந்தியாவுக்குள் புகுந்த பெரிய சந்தை வணிகத்தை தன்வசப்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் தற்போது ரிலையன்ஸின் ஜியோ ஸ்டோரும், மீஷோவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.