வர்த்தக பயன்பாட்டுக்கான 19kg சிலிண்டர் – ரூ.105-ஆக அதிகரிப்பு..!!
தலைநகர் டெல்லியில், வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டள்ளது.
19 கிலோ எடையுடைய வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ.105 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மூலம், செவ்வாய்க்கிழமை முதல் டெல்லியில் 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ.2,012-ஆக உள்ளது.
5 கிலோ எடைக் கொண்ட வர்த்தக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையும் ரூ.27 அதிகரித்துள்ளது. தற்போது டெல்லியில் 5 கிலோ எடையுடைய வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.569-ஆக உள்ளது. உள்நாட்டு எல்பிஜி சிலிண்டரில் எந்த விலை உயர்வும் இல்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையை அடிப்படையாக கொண்டு, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எல்பிஜி சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
குறிப்பிடத்தக்க வகையில், தேசிய எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலையை ரூ.91.50 குறைத்துள்ளன.