கவர்மண்ட் ஊழியர்கள் பென்ஷன் நிலையை கண்காணிக்க குழு!!!
தேசிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான பென்ஷனில் அதிக தொகை கிடைக்க போதுமான ஏற்பாடுகளை செய்து வருவதாக மத்திய நிதியமைச்சர் அம்மையார் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் தலைமயில் தேசிய பென்ஷன் திட்டத்தை கண்காணிக்கும் வகையில் புதிய குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அமைக்கும் குழுவில் மத்திய பயிற்சிப்பிரிவு,நிதியை நிர்வகிக்கும்PFRDA அமைப்பு அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர். பாஜக ஆளாக மாநிலங்களில் சில பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. ராஜஸ்தான்,சத்தீஸ்கர்,ஜார்க்கண்ட் மற்றும் பஞ்சாபில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்போதவாகவும், தேசிய பென்ஷன் திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் பணத்தை திரும்ப அளிப்பதாகவும் அவர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து வருகின்றனர். 2004ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்க்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கிடைக்காது என்று மத்திய அரசு திட்டவட்டமாக நாடாளுமன்றத்தில் ஏற்கனவே கூறியிருந்தது. பழைய ஓய்வூதிய திட்டம் என்பது மத்திய அரசு பணியாளர்கள் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50விழுக்காடு பென்ஷனாக அளிக்க வேண்டியுள்ளதால் அது அரசாங்கத்துக்கு தீவிர தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தீர்வு காணவே தேசிய பென்ஷன் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு,மேற்குவங்கத்தைத் தவிர்த்து 26 மாநிலங்களில் தேசிய பென்ஷன் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசு நியமித்துள்ள சிறப்பு குழு எப்போது ஆராய்ச்சி செய்து எப்போது அரசாங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்ற எந்த தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.