“நிறுவனங்கள் இணைப்பு பாதகத்தை ஏற்படுத்தாதாம்”
இந்திய போட்டி ஆணையம் என்ற அமைப்பு, பல நிறுவனங்களின் விவகாரங்களை கண்காணித்து வருகிறது.இந்த நிலையில் இந்த அமைப்புக்கு ஏர் இந்தியா நிறுவனமும், விஸ்தாாரா நிறுவனமும் இணைந்து ஒரு கடிதத்தை அளித்துள்ளனர். அதில் இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டால் பாதகமான எந்த தாக்கமும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவும் விஸ்தாராவும் இணைவது தொடர்பான ஆவணங்களை இந்திய போட்டி ஆணையம் கண்காணித்து வருகிறது.இந்த இரு நிறுவனங்கள் இணைந்தால் எந்த பாதிப்பு வரும் என்று ஏன் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவில்லை என்றும் இந்திய போட்டி ஆணையம் கேள்வி எழுப்பியது. இதன் விளைவாகவே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் விஸ்தாரா இணைந்தால் சந்தையில் எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும், பிற நிறுவனங்களுடன் ஆரோக்கியமான போட்டி ஏற்படுமா என்பது குறித்தும் சிசிஐ அமைப்பு ஆராய்ந்து வருகிறது. ஏர் இந்தியாவும் சிங்கப்பூரைச் சேர்ந்த விஸ்தாரா நிறுவனமும் இணைந்து ஒரே விமான சேவையாக இயங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் விஸ்தாரா நிறுவனத்தின் பங்கு மட்டும் சிங்கப்பூரில் 25.1%ஆக உள்ளது.
ஏர் ஏசியா இந்தியா என்ற பெயரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரசும்விஸ்தாராவும் இணைக்கும் பணிகள் நடக்கின்றன.
இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு,மற்றும் துபாய் உள்ளிட்ட இடங்களில் ஏர் இந்தியாவின் செயல்பாடு-இண்டிகோ நிறுவனத்தின் செயல்பாடு ஆகியவற்றையும் போட்டி ஆணையம் ஆராய்ந்து வருகிறது. ஏர் இந்தியாவும்-விஸ்தாராவும் இணையும்பட்சத்தில் விமான நிலையங்களில் பார்க்கிங், எரிபொருள், லேண்டிங் கட்டணம் உள்ளிட்ட பணம் குறையும் என்று ஏர் இந்தியா நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.