கொரோனா தடுப்பூசிக்கான உரிமத்துக்கு அடித்துக்கொள்ளும் நிறுவனங்கள்!!!!
மனித வரலாற்றிலேயே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா பெருந்தொற்று நேரத்தில் பல கோடி உயிர்களை காப்பாற்றியது தடுப்பூசிகள்தான். இந்த நிலையில் மாடர்னா தடுப்பூசி காப்புரிமை பெற்றது. காப்புரிமை பெற்ற மாடர்னா நிறுவனத்தினை எதிர்த்து பைசர் மற்றும் பயோ என்டெக் நிறுவனங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன. பைசர் நிறுவனம் ஏற்கனவே கொரோனாவுக்கு முன்பே சில தடுப்பூசிகளை தயாரித்து வந்ததாகவும், இது தொடர்பாக மாடர்னாவுக்கும் போட்டி இருந்துள்ளது. மருந்தை நாங்கள்தான் முதலில் கண்டு பிடித்தோம் என 3 நிறுவனங்களும் கடுமையாக போட்டிபோட்டு வரும் நிலையில், தற்போது மருந்தின் தேவையும் கணிசமாக குறைந்துள்ளது. மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக தங்கள் நிறுவன காப்புரிமையை தளர்த்திக் கொண்டதாகவும் மாடர்னா நிறுவனம் தனது எழுத்துப்பூர்வ வாதத்தை முன்வைத்துள்ளது.