பஜாஜை நாடும் நிறுவனங்கள்..
இந்தியாவில் இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் சந்தை மிகுந்த பிரபலமடைந்துள்ளது. அதில் குறிப்பாக பஜாஜ் நிறுவனம் மிகவும் பிரபலமாக இருக்கிறது. மற்ற போட்டியாளர்களை விடவும், பஜாஜ் நிறுவனம் தனித்துவமாக இருக்கிறது. இந்தியாவின் பிரபல பஜாஜ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ராகேஷ் சர்மா அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் வாடிக்கையாளர்கள் ஆதரவு இல்லாமல் பஜாஜ் நிறுவனம் டாப் 3 இடத்தில் இருக்காது என்று பேசினார். சில பழைய பைக் தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தையே பஜாஜ் நிறுவனத்திடம் விற்கவும் முயற்சிகள் நடந்து வருவதாக அவர் கூறினார். பெட்ரோல் ஸ்கூட்டர் 80 ஆயிரம் ரூபாய்க்கு இருக்கும் நிலையில் மின்சார ஸ்கூட்டர்கள் 1 லட்சம் ரூபாயாக இருக்கிறது. எனவே பலரும் மின்சார ஸ்கூட்டர்களை தேர்வு செய்வதாகவும் ராகேஷ் கூறினார். குறைவான தூரம்தான் பைக் ஓட்டுவோம் என்பவர்களின் தேர்வு மின்சார ஸ்கூட்டராக இருக்கிறது. எல்லாரும் மின்சார பைக்குகள் வாங்குகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை.மின்சார வாகனங்களுக்கு எதுபோன்ற பிரச்சனைகள் இருக்கிறதோ அதே பிரச்சனைகள்தான் சிஎன்ஜிக்கும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சந்தையில் பல்சர் 400 மிகவேகமாக விற்பனையாவதாக கூறிய அவர்,மிகக்குறைவாக இந்த வகை பைக்குகள் தயாரிக்கப்பட்டாலும் பிராண்டை இந்த நிறுவனங்கள் கட்டிக்காப்பதாகவும் ராகேஷ் குறிப்பிட்டார். கொரோனாவுக்கு முன்பு இருந்த அளவுக்கு வியாபாரம் உச்சம் தொடும் நிலையில்தான் இருப்பதாகவும் ராகேஷ் கூறினார்.