கிரீன் கார்டு கோருவோரை நிராகரிக்கும் நிறுவனங்கள்..
நிதிசிக்கல் இந்தியா மட்டுமின்றி பல பன்னாட்டு நிறுவனங்களையும் ஆட்டிப்படைக்கிறது. ஆட்குறைப்பு நடவடிக்கைகளை செய்து பணத்தை மிச்சம் பிடிக்கும் முயற்சியில் பெரிய நிறுவனங்களும் இறங்கியுள்ளன. இந்நிலையில் புதிதாக கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் பணியாளர்களின் விண்ணப்பங்களை அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்கள் நிராகரித்து வருகின்றன. இந்த பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் அடங்கும். வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து தங்கி வேலை செய்யும் பணியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் கிரீன் கார்டு கோரி விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கை இந்த சிக்கலை மேலும் அதிகரித்து வருகிறது. அமேசான் கூகுள் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களிடம் இருந்து பெறும் PERM விண்ணப்பங்களை அடுத்தாண்டு வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
PERM என்பது அமெரிக்காவிலேயே தங்கி வேலை செய்வதற்கான ஒரு சான்று, செயல்பாட்டு காரணங்களால் இந்தாண்டு முடியும் வரையும், கூகுள் நிறுவனம் 2025 வரையும் PERM வசதி இல்லை என்றும் அறிவித்துள்ளன. கூகுளின் முயற்சியைத்தான் மற்ற நிறுவனங்களும் பின்பற்றி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே ஆட்குறைப்பு ஒரு பக்கம் நடந்து வரும் இந்த சூழலில் , அமெரிக்காவில் தங்கி வேலை செய்யத் தயாராக இருக்கும் பணியாளர்களுக்கு வாய்ப்புகளை பெரிய டெக் நிறுவனங்கள் மறுத்து வருவது இந்தியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.