தங்க நகைக் கடனை உஷாரா அப்ரோச் பண்ணும் நிறுவனங்கள்!!!
தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருவதால் நடுத்தர மக்கள் எப்படியாவது தங்கத்தை வாங்கிப்போட்டுவிட வேண்டும் என்பதில் மிகத்தீவிரமாக இருக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அடகு வைத்த தங்க நகைகளை மீட்க மக்கள் வரிசைகட்டி காத்திருக்கின்றனர். மேலும் தங்கத்தை வைத்து பணம் கேட்போர் குறித்த விவரங்களையும் அடகு பெறும் நிறுவனங்கள் கவனமாக கையாண்டு வருகின்றன. தங்கத்தை வைத்து பணத்தை வாங்கும் மக்கள் மீண்டும் தங்கத்தை மீட்க முடியாத சூழல் வரலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்கத்தை வைத்து பணம் வாங்கும் மக்கள் தங்கத்தை மீட்க முடியாமல் போகும் சூழல் வரலாம் என்பதாலும் தங்க கடன்கள் மீதான் மாதத்தவணை அதிகரிக்கும் என்பதாலும் பணம் தரும் நிறுவனங்கள் விழிப்புடன் இருப்பதில் தவறில்லை என்கின்றனர் நிபுணர்கள். திடீரென தங்கம் விலை சரியவும் வாய்ப்புள்ளதால் நகைக்கு நிகரான பணத்தில் குறிப்பிட்ட அளவு மட்டுமே தர திட்டமிட்டு இருப்பதாகவும் டுரு கேப் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பெரிய நகரங்களைவிட இரண்டாம் தர செமி அர்பன் நகரங்களில்தான் தங்கத்தின் நுகர்வு அதிகளவில் காணப்படுகிறது. தங்கத்தை வைத்து பணம் தரும் நிறுவனங்களுக்கு இந்த முறை ஏற்பட்ட விலையேற்றம் நல்ல லாபத்தை தருவதாகவும் அதனை வாங்குவோர் தெரிவிக்கின்றனர். தங்கம் விலையை வைத்து ஒரு மிகப்பெரிய லாபத்தை சின்னஞ்சிறு நிறுவனங்கள் முதல் நடுத்தர நிறுவனங்கள் வரை பதிவு செய்துள்ளனர். எனினும் ஒவ்வொரு அடியையும் கவனமாக வைப்பதாக அந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.