புதுசா ஆளுங்களுக்கு வேலை கொடுக்கறதுக்குள்ள படாதபாடுபடும் நிறுவனங்கள்!!!
நல்ல திறமையான பணியாளர்களுக்கு எப்பவும் தேவை இருந்துகொண்டேதான் இருக்கிறது. எனினும் கடந்தாண்டில் நிறையபேரை கல்லூரிகளுக்கு சென்று ஆட்களை எடுத்த நிறுவனங்கள் அவர்களை பணிக்கு தயார்படுத்துவதில் தொய்வு இருந்தபடியே உள்ளது. அதிலும் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் புதிதாக திறமையான பணியாளர்களை சேர்ப்பதற்குள் பெரிய ஐடி நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன விப்ரோ நிறுவனத்தில் புதிதாக ஆட்களை சேர்ப்பதில் உள்ள தொய்வுக்கு சந்தை நிலவரங்கள் காரணம் என்றும் வியாபாரத்துக்கு தேவையான எதிர்பார்ப்புகள் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ள அந்நிறுவன CHFO கோவில், தேவை ஏற்படும்போது தான் தங்கள் நிறுவனம் அதற்கு தகுந்தபடி பணிகளை செய்யும் என்றும் புதிதாக எடுத்தவர்களை பணியாளர்களாக மாற்றும் விகிதம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். பெரிய நிறுவனங்கள் தற்போது வரை கடந்த காலாண்டில் போதுமான ஏற்பாடுகளை செய்யவில்லை என்று புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளன. இந்தசூழலில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அந்தளவுக்கு தேவை பெரிதாக ஏற்படாததால்தான் புதிதாக எடுத்தவர்களுக்கு வேலை தருவதில் சிக்கல் உள்ளதாக சந்தையின் கள நிலவரத்தை விப்ரோ நிறுவன அதிகாரி கூறியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.