ஆட்களை வேலைக்கு புதிதாக எடுக்காத நிறுவனங்கள்…
ஒரு காலகட்டத்தில் படித்து முடித்தவருக்கு வேலைகள் மிக எளிதாக கிடைத்துவிட்டது. ஆனால் ஒரு பணிக்கு தற்போது அத்தனை போட்டிகள் உள்ளன.அதுவும் டெக் பணிகள் என்றால் போதும், கழுத்தில் கத்தி வீசிக்கொண்டே இருப்பார்கள் எனலாம். உலகளவில் நிகழும் பிரச்னைகள் எல்லாவற்றிற்கும் காரணம் காட்டி ஆட்களை பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது.அதுவும் டெக் நிறுவனங்களில் இது அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்கன நடவடிக்கை காரணமாக பல முன்னணி நிறுவனங்கள் புதிய மாணவர்கள் மற்றும் இளம் பணியாளர்களை தேர்வு செய்வதை நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் விப்ரோ நிறுவனத்தில் வழக்கத்தைவிட இந்தாண்டு குறைவான பொறியாளர்களை வேலைக்கு எடுக்கப் போகிறார்கலாம்.. நடப்பாண்டில் மட்டும் 22ஆயிரம் பொறியாளர்களுக்கு விப்ரோவில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தரப்பினர் விளக்கமறித்துள்ளனர். உலகளவில் சாதகமற்ற சூழல் நிலவி வருவதால்,ஜடி நிறுவனங்களில் சில 2024 மார்ச் வரை புதிய ஆட்களை சேர்க்கப் போவதில்லை என்றே தெரிவித்துவிட்டனர். இன்போசிஸ்,விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களில் மிகக் குறைந்த கணிசமான அளவுக்குதான் பணியாளர்கள் சேர்த்துள்ளனராம்…டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கும் திறமையான பணியாளர்களை வைத்தே பல புராஜெக்ட்களை முடிக்க ஐடி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.வரும் மே மாத வாக்கில் இந்தியாவில் பொதுத்தேர்தல் வர உள்ள நிலையில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த சிக்கல் தீர்க்கப்படவேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 245பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு ஐடி நிறுவன ஏற்றுமதி இருப்பதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா உச்சகட்டத்தில் இருந்தபோது கணக்கு வழக்கு இல்லாமல் ஐடி ஊழியர்கள் எடுக்கப்பட்ட நிலையில், சிக்கன நடவடிக்கையாக புதிய ஆட்களை எடுக்க மறுப்பதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க பணவீக்கம், உக்ரைன்-ரஷ்யா போர் உள்ளிட்டவையும் சர்வதேச சந்தையில் ஐடி நிறுவனங்கள் அளவுக்கு அதிகமான சிக்கல்களை சந்திக்க முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது.