சந்தை மூலதனத்தை அதிகப்படுத்திய நிறுவனங்கள்..!!!
இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக டாடா மோடார்ஸ் நிறுவனம் திகழ்கிறது. இதேபோல் கட்டுமானம் மற்றும் பொறியியல் துறையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனமாக L&T உள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தாண்டில் இதுவரை மட்டும் சந்தை மூலதனத்தை 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் உள்ள மொத்த அளவில் இந்த இரு நிறுவனங்கள் மட்டும் 5.3% அளவுகொண்டதாக உள்ளன. ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் நிஃப்டியில் லாபம் பெற்ற நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதல் இடத்தில் இருக்கிறது.இதே காலகட்டத்தில் L&Tநிறுவனத்தின் வருவாய் 30%கூடியுள்ளது. HDFC-HDFCவங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்தபோது இருந்த திடீர் ஏற்றம் இந்த இரு நிறுவனங்களிலும் காணப்பட்டது. இதற்கு அடுத்த இடத்தில் 6.4பில்லியன் சந்தை மூலதனத்தை அதிகப்படுத்தியதாக NTPC நிறுவனம் பட்டியலில் 3ஆம் இடத்தில் உள்ளது.6.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடன் icici வங்கி இந்த பட்டியலில் 4ஆம் இடம் பிடித்திருக்கிறது. ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் நிதி பயன்பாடு 24 நிதியாண்டில் அதிகரிக்கும் என்றும் அந்நிறுவனம் அதிகரித்துள்ளது. விரைவில் கடன் இல்லாத நிறுவனமாக அந்நிறுவனம் மாற இருப்பதால் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றது. சந்தை மூலதனம் பெற்றதில் முன்னணியில் இந்த நிறுவனங்கள் இருக்கும் சூழலில்அதிகம் இழந்த நிறுவனங்கள் பட்டியலில் அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஷன் நிறுவனங்கள் உள்ளன. அதானி கேஸ் நிறுவனம் 41 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் அதானி எனர்ஜி நிறுவனம் 24 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை மூலதனமாக இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.