“மாச கணக்கில் பணம் தராத நிறுவனம்”
இந்திய அளவில் பிரபல நிறுவனமாக திகழ்வது பைஜூஸ். இந்த நிறுவனம் கொரோனா காலகட்டத்தில் கோடிகளை குவித்தது. ஆனால் வகை தொகை இல்லாமல் ஆட்களை வேலைக்கு எடுத்த நிறுவனம், பிறகு பலரை வேலையை விட்டு நீக்கியது. இந்த நிலையில் குறிப்பிட்ட நிறுவனம் தனது பணியாளர்களுக்கு மாத கணக்கில் epf எனப்படும் நிதி அளிக்கவில்லை என்றும் புகார்கள் எழுந்தன. 24 நிதியாண்டில் பலருக்கும் இந்த தொகை தரவில்லை என்று கூறப்படுகிறது.இதனை பழைய ஊழியர்கள் வெளியிட்ட பே ஸ்லிப் களும் உறுதி செய்து உள்ளன. அடுத்தடுத்த புகார்களில் சிக்கும் பைஜஸ் நிறுவனம் ஒருகாலத்தில் மதிப்புமிக்க நிறுவனமாக இருந்தது. ஒரு நிறுவனம் தனது பணியாளர்களுக்கு pf தொகை தர தவறினால் எவ்வளவு வட்டி என்பதை ஏற்கனவே மத்திய அரசு அறிவித்தது உள்ளது. அதன்படி 2 மாதங்கள் தாமதமாக ஆகும்பட்சத்தில் 5%, 2-4 மாதங்களாக இருந்தால் 10%, 4-6 மாதங்கள் வரை 15% ,6 மாதங்களுக்கு மேல் pf செலுத்தவில்லை என்றால் 25% தொகை வட்டி ஆக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும். அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் Pf பணம் செலுத்த pf நிறுவனம் தெரிவித்து உள்ளது. Pf பணம் சம்பளத்துடன் வ்ரவில்லை என்றால் பணியாளர்கள் நிறுவனம் மீது Pf அலுவலகத்தில் புகார் கூறலாம் என்பது அடிப்படை உரிமை ஆகும். அதனை தாராளமாக செய்யலாம் என்று pf நிறுவனம் கூறியுள்ளது.