கிஷோர் பியானிக்கு எதிராக புகார்!!!
பியூச்சர் குழுமத்தின் புரோமோட்டராக இருப்பவர் கிஷோர் பியானி, இவர் பணியாற்றி வந்த நிறுவனங்கள் திவால் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு கடன் அளித்த நிறுவனங்கள் மும்பையில் திவால் நீதிமன்றத்தை நாடியுள்ளன. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் இவர் தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆக்சிஸ் டிரஸ்டீகள் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.இவர் பணத்தை திரும்ப அளிக்க அவகாசம் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 600 கோடி ரூபாய் அளவுக்கு கிஷோர் பியானியிடம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆக்சிஸ் டிரஸ்டீஸ் சர்வீஸ் மட்டுமின்றி,கேட்டலிஸ்ட் டிரஸ்டீஷிப் ஆகிய நிறுவனமும் புகார் அளித்துள்ளது. வேறொரு நிறுவனங்கள் வாங்கிய கடன்களுக்கு கிஷோர் பியானி ஜாமின் கையெழுத்திட்டுள்ளார். குறிப்பாக பியூச்சர் குழுமத்துக்கு இவர் ஜாமின் கையெழுத்து போட்டதுதான் தற்போது பிரச்னையாக மாறியுள்ளது. திவால் நடவடிக்கை தொடர்பாக கடன் கொடுத்தவரோ, கடன் வாங்கியவரோ தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் புகார் அளிக்க முடியும். அந்த வகையில் கடன் கொடுத்தவர்கள் கிஷோர் பியானிக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். பிரச்னைகளை தீர்ப்பதற்கான குழுவும் இந்த தீர்ப்பாயத்தால் நியமிக்கப்படும். கேரண்டி கையெழுத்து போடும் புரோமோட்டர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது. கிஷோர் பியானி விவகாரத்தில் என்ன நடக்கும் என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.