பங்குதாரர்களிடம் ஆலோசிங்க: நிதி அமைச்சர்..
இந்திய பங்குச்சந்தைகளில் கட்டுப்பாடுகள் அதிகரித்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளநிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய ஆலோசனையை செபிக்கு அளித்திருக்கிறார். அதில் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் புதிய கண்டுபிடிப்புகள், புதுமைகளை புகுத்த முடியாது என்றும், புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவர விரும்பினால் பங்குதாரர்களிடம் ஒரு வார்த்தை கேளுங்கள், ஆலோசியுங்கள் என்று செபிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை வழங்கியிருக்கிறார்.
பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் , அரசுத்துறை வங்கிகள் இன்னும் அதிக முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும் என்றும் முதலீடுகளை ஈர்த்து அவர்களுக்கு அதிக வட்டி தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதே நேரம் கவனமாக இருக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி தரவுகளின்படி உணவு அல்லாத துறைக்கு வழங்கப்பட்ட கடன் 15.3%ஆக செப்டம்பரில் இருக்கிறது. இது கடந்தாண்டு 16.9%ஆக இருந்தது. புதிதாக ஒரு திருத்தம் செய்ய வேண்டும் என்றால் பங்குதாரர்களிடம் கருத்துகளை பெற்று அவர்கள் கோரிக்கைக்கு ஏற்றபடி மாற்றங்களை செய்யுங்கள் என்றும் அம்மையார் குறிப்பிட்டுள்ளார். மிகவும் கட்டுப்பாடுகளுடன் இருந்தால் அது இந்திய பொருளாதாரத்துக்கே பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். வாடிக்கையாளர்,முதலீட்டாளர்களுக்கு எழும் அச்சங்களை ஆலோசித்தால் அந்த அச்சம் குறையும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார்.