தொடர்ந்து விலையேற்றம் காணும் நுகர்வோர் பொருட்கள் !
இந்த வருட ஆரம்பத்தில் இரண்டு மூன்று முறை ஏற்றம் கண்ட நுகர்வோர் பொருட்கள் மற்றும் அதனை தயாரிக்கும் நிறுவனங்கள் மீண்டும் ஒரு விலையேற்றத்துக்கு தயாராகி வருகின்றன. வாகனப் போக்குவரத்து செலவு.மற்றும் சப்ளைகளில் உள்ள முடக்கங்கள் காரணமாக விலைகள் ஏறுவதாக விளக்கங்கள் கூறப்பட்டன, எஃப் எம் சி ஜி பொருட்கள் 4லிருந்து 10 சதவீதமாக தங்கள் பொருட்கள் மீதான விலையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இதனால் அதன் விற்பனை சரியலாம். இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இந்த விலையேற்றத்தை நாம் காணலாம்
ஏற்கனவே 3லிருந்து 5 சதம்வரை எலட்ரானிக் பொருட்களான வாஷிங் மெசின், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் விலை ஏற்றம் கண்டன, இப்போது மீண்டும் 6 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை விலையை அடுத்த மாதம் முதல் ஏற்றப் போவதாக தெரிவித்துள்ளன. .2020ம் ஆண்டு டிசம்பர் முதல்
இந்த ஒரு வருட காலத்தில் பொருட்களின் விலை 4 தடவை ஏற்றம் கண்டுள்ளன.
கார், பைக் உள்ளிட்ட விற்பனையையும் இந்த விலையேற்றம் விட்டு வைக்கவில்லை என்று அதனை தயாரிக்கும் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான மாருதி சுசுகி, ஹூண்டாய் ,டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஸ்கோடா, போக்ஸ்வேகன்,டொயோட்டா. ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனங்கள் மூலப் பொருட்களின் விலையை காரணம் காட்டி சென்ற வருடத்தில் பல தடவை விலையை ஏற்றியுள்ளன, ஹீரோ மோட்டார் கார்ப் மீண்டும் ஒரு தடவை மூலப் பொருட்களின் விலையை காரணம் காட்டி 2 ஆயிரம் ரூபாயை ஜனவரி 4ம் தேதி முதல் ஏற்றப்போவதாக கூறியுள்ளது,முன்னதாக இந்தப் புதுவருடத்தில் இருந்து விலையை ஏற்றப் போவதாக மாருதி சுசூகி தெரிவித்துள்ளது, கடந்த 18 மாதங்களில் தனது பொருட்களின் விலையை மாருதி சுசூகி 4 முறை உயர்த்தியுள்ளது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாபர், பிரிட்டானியா, மேரிகோ உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களின் பொருட்கள் ஏற்கனவே கச்சா எண்ணெய்,, பாம் ஆயில் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலையேற்றத்தைக் காரணம் காண்பித்து கடந்த இரண்டு காலாண்டுகளில் 5லிருந்து 12 சதம் வரை உயர்த்தியது, இந்த விலையேற்றங்கள் தவிர்க்க முடியாது என்ற எல் ஜி எலட்க்ட்ரானிக்ஸின் வீட்டு பாவனைப் பொருட்கள் விற்பனைத் துணைத் தலைவர் தீபக் பன்சால் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் டியுரபிள் இண்டஸ்ட்ரீஸின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறுகையில் ஸ்டீல், காப்பர், அலுமினியம், பிளாஸ்டிக் பொருட்களின் விலைகள் அதிகரித்ததால் இந்த விலையேற்றம் தவிர்க்க முடியவில்லை என்று தெரிவித்தனர். மூன்றாவது காலாண்டில் ஸ்டீல் விலைகள் 38 ரூபாயில் இருந்து 77 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. தாமிர விலைகள் டன் ஒன்றுக்கு 5,200 டாலரிலிருந்து 9,700 டாலராக உயர்ந்துள்ளது, அலுமினியத்தின் விலைகளும் டன் ஒன்றுக்கு1700 – 1800 டாலரில் இருந்து 2,700-2800 டாலராக உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றங்களுக்கு மத்தியில் விலை குறைப்பும் இருந்துள்ளது. ரோடியம் எனும் விலை உயர்ந்த பொருள் டன் ஒன்றுக்கு 26,000 ரூபாயில் இருந்து 18,000 ரூபாய்க்கு குறைந்துள்ளது. ஆனால் இந்த விலைகுறைப்பு தற்காலிகமானது என்று சிலர் கூறுகிறார்கள், நிவக்கரி விலை குவிண்டால் ஒன்றுக்கு 180 ரூபாயில் இருந்து 432 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.