தொடரும் ஏற்றம்..அதிரும் சந்தைகள்..
செப்டம்பர் 14ஆம் தேதி இந்திய சந்தைகளில் பெரிய மாற்றம் காணப்படவில்லை. சொல்லப்போனால் லேசான உயர்வுதான் இருந்தது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 52 புள்ளிகள் உயர்ந்து 67518 புள்ளிகளாக வர்த்தகம் முடிந்தது.தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 33 புள்ளிகள் உயர்ந்து 20103 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது.உலோகம்,பொதுத்துறை வங்கிகளில் பெரிய அளவில் முதலீடுகள் காணப்பட்டன. வர்த்தகத்தின் போது புதிய உச்சத்தை மும்பை பங்குச்சந்தை எட்டியது. 67,771 புள்ளிகளாக பதிவான அந்த சந்தை பிற்பகலில் அதனை தக்கவைக்க தவறியது.UPL, Hindalco Industries, ONGC, M&M,Eicher Motors உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன.Asian Paints, Coal India, ITC, LTIMindtree,Britannia Industries. ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. Jyoti, Central Bank Of India, Wipro, Titan Company, Maruti Suzuki India, Tata Steel, Punjab National Bank, NHPC, LTIMindtree, Berger Paints India, HDFC Asset Management Company, Indian Overseas Bank, Tech Mahindra, Tata Consultancy Services, Dhampur Sugar Mills, Indusind Bank, Bank Of India, Balrampur Chini Mills,உள்ளிட்ட 200க்கும் அதிகமான பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை எட்டின. தங்கம் மற்றும் வெள்ளியில் மாற்றமின்றி முன்தின விலையிலேயே தொடர்கிறது.ஆபரணத்தங்கம் விலை . ஒரு கிராம் 5480 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 43,840ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 77 ரூபாயாக விற்கப்பட்டது. கட்டி வெள்ளி விலை கிலோ77ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. இந்த விலைகளுடன் 3விழுக்காடு ஜிஎஸ்டியும் செய்கூலி, சேதாரமும் சேர்க்க வேண்டும். ஆனால் ஜிஎஸ்டி நிலையாக எல்லா பொருட்களுக்கும் 3விழுக்காடுதான். அதே நேரம் செய்கூலி,சேதாரம் ஆகியவை கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.