இந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் சரிவு
இந்திய பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 147 புள்ளிகள் சரிந்து 59ஆயிரத்து958 புள்ளிகாக இருந்தது.தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியிலும் குறிப்பிடத்தகுந்த சரிவு காணப்பட்டது37 புள்ளிகள் சரிந்த தேசிய பங்குச்சந்தை, வர்த்தக நேர முடிவில்,17ஆயிரத்து858 புள்ளிகளாக இருந்தது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்நாட்டு மந்த நிலை ஆகியவற்றின் காரணமாக முதலீட்டாளர்கள் பெரிய தொகையை முதலீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை. அமெரிக்காவின் பணவீக்க விகிதமும் சந்தையின் போக்கை தீர்மானித்தது டிவிஸ் லேப்ஸ்,ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. SBI Life insurance, அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அற்றம் கண்டன.
நிஃப்டி வங்கி,ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்புத்துறை பங்குகள் சரிவை சந்தித்தன.