பங்குச்சந்தைகளில் தொடரும் சரிவு..
அக்டோபர் 25 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகள் பெரிய சரிவை சந்தித்தன. இது தொடர்ந்து 5 ஆவது நாளாக நடக்கும் வீழ்ச்சியாகும்.மத்தியகிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாகவும்,அமெரிக்க பாண்ட்களின் வளர்ச்சியால் இந்தியாவில் இருந்து முதலீட்டாளர்கள் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. லெபனானின் மீது இஸ்ரேல் தற்போது தாக்குதல்களை தொடர்ந்ததால் இந்த போர் தீவிரமடைந்திருக்கிறது. இதன் பாதிப்பு இந்திய சந்தைகளிலும் பிரதிபலிக்கிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 522 புள்ளிகள் சரிந்து, 64,049 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 159 புள்ளிகள் சரிந்து 19,122 புள்ளிகளாக வணிகம் நிறைவுற்றது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளபோதும்,பலநிறுவனங்களின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் கவனமாக முதலீடுகளை செய்து வருகின்றனர். மொத்தம் 1193 பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன. 2371 பங்குகள் சரிந்தன.102பங்குகள் பெரிய மாற்றமின்றி முடிந்தன. டெல்டா கார்ப் நிறுவன பங்குகள் 3.31%உயர்ந்தன. இதேபோல் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் பங்குகளும் 1.88% உயர்ந்தன. கேவால் கிரன் கிளாத்திங் நிறுவன பங்குகள்-10.03%உயர்ந்தன.Gensol Engineering நிறுவனத்தின் பங்குகள் 5.77% உயர்ந்தன. Torrent Pharma-2.21%ஏற்றம் கண்டன.ஜீபிலன்ட் நிறுவன பங்குகள் 7%க்கும் அதிகமாக சரிந்தன. Mrs Bector Foods நிறுவன பங்குகள் 8% வரை சரிந்தன. சஃபாரி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் 6.87%, Teamlease services-6.67% வீழ்ச்சியை கண்டன.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்திருக்கிறது. ஒரு கிராம் தங்கம் 5655 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 45ஆயிரத்து 240 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு,50 காசுகள் குறைந்து 77 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 77ஆயிரத்து 500 ரூபாயாக விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் 3%ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும். இவற்றில் ஜிஎஸ்டி நிலையானது. ஆனால் செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.