பங்குச்சந்தையில் தொடர் ஏறுமுகம்…
செப்டம்பர் 12 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது.வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 94 புள்ளிகள் உயர்ந்து 67,221புள்ளிகளாக இருந்தது.தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 3 புள்ளிகள் சரிந்து 19993 புள்ளிகளாகவர்த்தகம் நிறைவுற்றது. சந்தையில் அதீத ஏற்ற இறக்கம் காணப்பட்டது.தேசிய பங்குச்சந்தையில் TCS, L&T, Infosys, Divis Labs ,UltraTech Cement உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தை பதிவு செய்தன.
BPCL, Power Grid Corp, NTPC, Adani Enterprises,Coal India உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. தகவல் தொழில்நுட்ப பங்குகள் மட்டுமே 1விழுக்காடு உயர்ந்து முடிந்தது.ஆட்டோமொபைல்,ஆற்றல் மற்றும் உலோகத்துறை பங்குகள் 1 முதல் 3% வரை சரிந்து முடிந்தன. Axis Bank, Adani Power, Karnataka Bank, ITI, Wipro, Central Bank Of India, SJVN, Rail Vikas Nigam, HCL Technologies, Larsen & Toubro, Power Grid Corporation OF India, Exide Industries உள்ளிட்ட 250க்கும் அதிகமான பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து வர்த்தகத்தை முடித்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 44160 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 5 ரூபாய் அதிகரித்து 5520 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து 78 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து 78 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி செய்கூலி,சேதாரம் ஆகியவை சேர்க்கப்படவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்,(கடைக்கு கடை செய்கூலி,சேதாரம் மாறுபடும் என்பதை கவனிக்கவேண்டும்).