சமையல் எரிவாயு விலை: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தற்போது வரை சர்வதேச கச்சா எண்ணெய் விலை எவ்வளவு ஏற்றம் பெறுகிறதோ அதன் அடிப்படையிலேயே வீட்டு உபயோக சிலிண்டர் விற்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. இதில் உள்ளூர் இயற்கை எரிவாயுவுக்கும், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கும் தொடர்பு ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.அதாவது இந்திய கச்சா எண்ணெய் கையிருப்பில் இருந்து 10 விழுக்காடு இயற்கை எரிவாயு விலை இருக்கும். இதேபோல் கேஸ் விலையை ஒரு மெட்ரிக் மில்லியன் பிரிட்டீஷ் யூனிட்டின் அதிகபட்ச விலை 4 அமெரிக்க டாலர்களாக உள்ளது. அதே விலை அதிகபட்சமாக 6.50 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவால் அழுத்தம் தரப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் குழாய் மூலம் அளிக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலை குறையும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். இந்தியாவிலேயே கிடைக்கும் இயற்கை எரிவாயுக்கு ஏற்கனவே குறிப்பிட்ட விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய எண்ணெய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் எரிவாயுவுக்கு 20விழுக்காடு பிரீமியம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கச்சா எண்ணெயில் இருந்து கிடைக்கும் எரிவாயுவுக்கு பதிலாக இயற்கை எரிவாயுவை 2030ம் ஆண்டுக்குள் 15விழுக்காடாக உயர்த்துவது குறித்து அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அமைச்சர் பேசியுள்ளார்.