கிரிடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பு!!!
தொட்டதெற்கெல்லாம் ஸ்வைப் செய்தே பழக்கப்பட்ட நம்மில் பலருக்குமான செய்தியாக இது இருக்கலாம்.இந்தியாவில் கிரிடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்பாடு மெல்ல தேய்ந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.ஆனால் கிரிடிட் கார்டில் பணம் செலுத்துவோரின் விகிதம் 47.4 %அதிகரித்துள்ளது. அதாவது 14.32 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனைகள் கிரிடிட் கார்டுகளில்தான் நடைபெறுகின்றன.கடந்தாண்டில் கிரிடிட் கார்டில் 224 கோடி பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இது 291 கோடி பரிவர்த்தனைகளாக உயர்ந்துள்ளன.இந்திய பொருளாதாரம் குறித்து ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவர குறிப்பில் கூறப்பட்டுள்ளது.டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 7.30லட்சம் கோடி ரூபாயாக இருந்த டெபிட் கார்டு பயன்பாடு தற்போது 7.19 லட்சம் கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது. 394 கோடி பரிவர்த்தனைகளில் இருந்து தற்போது டெபிட் கார்டு பயன்பாட்டு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 342 கோடிஆக சரிந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் கார்டுகள் பயன்பாடு முற்றிலும் சரியத் தொடங்கின.டெபிட் கார்டில் பொருட்கள் வாங்குவதைத்தான் கிரிடிட் கார்டு பயன்படுத்துவோர் தவிர்த்து வருகின்றனர் என்கிறது அந்த ஆய்வறிக்கை. இந்தியாவில் மார்ச் மாதம் வரை 8.3 கோடி கிரிடிட் கார்டுகள் இருக்கின்றன.இது கடந்தாண்டைவிடவும் 15.9விழுக்காடு உயர்வாகும். கடைகளில் எளிதாக பாயின்ட்ஆப்சேல் இயந்திரம் இருப்பதாலும் மாதத்தவணை செலுத்தும் முறை எளிதாக்கப்பட்டதாலும்,கிரிடிட் கார்டு பயன்பாட்டைத்தான் மக்கள் பெரிதும் விரும்புவதாக கூறப்படுகிறது. மாதந்தோறும் கிரிடிட் கார்ட்களை பயன்படுத்தும் பண அளவானது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் குறிப்பாக ஜூலை மாதத்தில் மட்டும் 1.45 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ளதால் டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது.ஆகஸ்ட் 2023-ல் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு யுபிஐ செயலி மூலம் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.குறிப்பிட்ட அந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்து58 கோடி பரிவர்த்தனைகள் மூலம் 15.76லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன.