கோர்ட் வரைக்கும் போன கிரிடிட் சூய்ஸ் நிறுவன பஞ்சாயத்து!!!
ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த கிரிடிட் சூய்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் பல நாட்டு வங்கிகளும் நிதி பங்காளர்களாக உள்ளனர். இந்த நிலையில் நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாக சில நாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தி இருந்தது. குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த பங்கு வைத்திருக்கும் நபர்கள் creditsuisse நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றம் வரை சென்று வழக்கு பதிந்துள்ளனர். இதன் விளைவாகவே அந்த நிறுவன பங்குகள் பெரிய சரிவை சந்தித்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்க முதலீட்டாளர்கள் , குறிப்பிட்ட ஸ்விஸ் நிறுவனத்துக்கு கொடுத்த தொகையையே திரும்ப எடுக்க திட்டமிட்டுள்ளதுடன்,கூடுதல் நிதி அளிக்க இயலாது என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க முதலீட்டாளர்களை ஈடுசெய்யும் முயற்சியில் ஸ்விஸ் நிறுவனம் களமிறங்கியுள்ளது. வழக்கு நியூஜெர்சி நீதிமன்றத்தில் நடந்து வரும் சூழலில் பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்ய 54 பில்லியன் டாலர் கடனை ஸ்விட்சர்லாந்து தேசிய வங்கி அளித்துள்ளது. இருதரப்பு பிரச்சனைகளை தீர்க்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்ற வழக்கு முடிந்தபின்னரே உண்மையில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் மோசடி செய்துள்ளதா என்பது தெரியவரும் என்பதால் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு தயக்கம் எப்போதும் இருந்தபடியே உள்ளது என்றால் அது மிகையல்ல..