வாரனை பார்க்க குவிந்த கூட்டம்..
அமெரிக்காவின் பிரபல முதலீட்டாளரான வாரன் பஃபெட் ஒமாஹாவில் ஒரு கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் திடீரென நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆண்டுக்கு ஆண்டு பெர்க்ஷைர் நிறுவனத்தின் ஆண்டுக்கூட்டம் இப்படித்தான் இருக்கும் என்று அங்கு வந்திருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். 826 பில்லியன் சொத்து மதிப்பு கொண்டுள்ள பெர்க்ஷைர் நிறுவனத்தின் ஆண்டுக்கூட்டத்தில் காலை 7 மணிக்கு கதவு திறக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்துவிட்டனர். வாரனின் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே சிலர் வெளிநாடுகளில் இருந்தும் விமானம் பிடித்து வந்து அதிகாலை 2 மணியில் இருந்து காத்திருப்பது வழக்கம்தானாம். மிகச்சிறந்த முதலீட்டு ஆலோசகரின் பேச்சை கேட்க ஆண்டுதோறும் வந்துவிடுவேன் என்று ஆலபாமாவைச் சேர்ந்த ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். இதேபோல் தைவானில் இருந்து வாரனை காண வால்டர் சாங் நேரில் வந்திருந்தாார். கனடா, தென்ஆப்ரிக்கா, நெப்ராஸ்கா,டெக்சாஸ், அயர்லாந்து என பல பகுதிகளிலும் இருந்து சிலர் குடும்பத்தினருடனும் வந்திருந்தனர். மிகச்சிறந்த கற்றல் அனுபவமாக இந்த கூட்டம் அமைந்ததாக சில பார்வையாளர்கள் தெரிவித்தனர். சிலர் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனர். மிக இளம் வயதில் இருந்தே பங்குச்சந்தை சார்ந்த விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லித்தர விரும்பியதால் குழந்தைகளையும் அழைத்து வந்ததாக பெற்றோர் தெரிவித்தனர்.