கச்சா எண்ணெயும் இந்திய பொருளாதாரமும்
கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பது பலநாடுகளின் பொருளாதாரத்தை இயக்கும் சக்தியாக உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இப்போது வரை பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. கடந்தாண்டு 83 டாலர்களாக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் தற்போது 93டாலர்களாக உயர்ந்திருக்கிறது. வாடிக்கையாளர் பணவீக்கம் குறைந்துள்ளபோதும் ரிசர்வ் வங்கியின் தாங்கும் சக்தியைவிட அதிகளவிலேயே இருக்கிறது. தேர்தல் வர இருக்கும் சூழலில் கச்சா எண்ணெய் விலை உயர்வு பெரிய அளவில் இந்தியாவில் இருக்காது என்ற கருத்தும் உள்ளது.வாடிக்கையாளர் பணவீக்கம் என்பது கச்சா எண்ணெய் சார்ந்து இல்லாமல், உணவுப்பொருட்களின் விலை சாரந்தது என்றும் கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு,டாலர் மதிப்பு அதிகரிப்பு உள்ளிட்டவை இந்திய ரூபாயின் மதிப்பை வெகுவாக பாதிக்கிறது. இந்தாண்டின் 3 மற்றும் 4ஆம் காலாண்டின்போது அமெரிக்க டாலர்-இந்திய ரூபாயின் மதிப்பு என்பது 82.9 அல்லது 82.7 ரூபாய் என்ற அளவிலேயே இருக்கும் என்று ராய்ட்டர்ஸ் கணித்துள்ளது. கலால் வரியை குறைக்கும்பட்சத்தில் மத்திய அரசுக்கு கூடுதல் வரிச்சுமை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருலிட்டர் பெட்ரோலில் மத்திய கலால் வரி மட்டும் 20%உள்ளது.இந்தாண்டு ஏப்ரல் மற்றும் ஜூலை காலகட்டத்தில் மட்டும் கலால் வரியாக 76,200 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.இழப்புகளை சரி செய்ய விண்ட்ஃபால் டாக்ஸ் வரி உதவி செய்து வருகிறதாம். ஒட்டுமொத்த பணவீக்கம் என்பது வரும் நாட்களில் மேலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. கச்சா எண்ணெயின் விலை ஏற்றமடைந்தால் வெளிநாட்டு நிதி அதிகம் புழங்கும். இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. 10டாலர் கச்சா எண்ணெய் விலை உயரும்பட்சத்தில் இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அரைவிழுக்காடு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எண்ணெயை சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு இழப்பு தொடர்ந்து அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.இந்தியாவில் விண்ட்ஃபால் வரி அதிகரிக்கும் என்பதால் ஓரளவு இந்தியாவில் சமாளிக்க இயலும் என்றும்நிபுணர்கள் கணிக்கின்றனர்.