வெனிசுலாவில் இருந்து இறங்கும் கச்சா எண்ணெய்..
கடந்த 2020ஆம் ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட இருப்பதாக இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் உறுதி செய்திருக்கிறார்.
வெளிநாடுகளுக்கு கச்சா எண்ணெயை விற்க வெனிசுலாவுக்கு விதித்த தடையை அமெரிக்கா கடந்த அக்டோபரில் விலக்கிக்கொண்டது. இதன் காரணமாகவே தற்போது இந்தியாவின் கவனம் வெனிசூலா பக்கம் திரும்பியிருக்கிறது.
வெனிசுலாவில் இருந்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இந்தியன் ஆயில் மற்றும் hpcl -மிட்டல் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெயை வாங்க உள்ளன.
அமெரிக்கா தடை விதிப்பதற்கு முன்பு, இந்தியா அதிக கச்சாஎண்ணெயை வெனிசுலாவிடம் இருந்து வாங்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர் புரி,இந்தியா எப்போது கச்சா எண்ணெயை வெனிசுலாவில் இருந்து வாங்கும் என்று உலகமே காத்திருந்தது என்றும் தெரிவித்தார்.
எந்த தடையும் இல்லாமல் எந்த நாடு இருக்கிறதோ அதில் இந்தியா கச்சா எண்ணெயை வாங்கும் என்றும் புரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சராசரியாக ஒரு நாளில் 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் சுத்தீகரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டுக்கு பிறகு வெனிசுலாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வணிகம் நடப்பதாக கூறியுள்ளது.
தடைக்காலத்துக்கு முன்பு ஒரு நாளைக்கு 1 கோடி பேரல் கச்சா எண்ணெயை இந்தியா வெனிசுலாவில் இருந்து இறக்குமதி செய்தது.
இதில் ரிலையன்ஸ் மட்டுமே 5 பெரிய டேங்கர்களில் கச்சா எண்ணெயை வெனிசுலாவில் இருந்து இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது.