இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும்.. – உண்மையை சொன்ன அம்மையார்..!!
கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் காரணமாக இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த நெருக்கடியை சமாளிக்க எந்தெந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து இனிமேல் தான் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்திய நாட்டின் எரிபொருள் தேவைக்காக 85% கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாகவும், வேறு ஆதாரங்களை வைத்து கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்வது தொடர்பாக ஆராய வேண்டும். உலக கச்சா எண்ணெய்யினுடைய சந்தையை கணிப்பது மிகவும் கடினம். கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஒதுக்கப்படும் நிதி குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.