நாடாளுமன்றத்தில் கிரிப்டோ ஒழுங்கு மசோதா தாமதமாகலாம் !
கிரிப்டோகரன்சி கட்டமைப்பில் மத்திய அரசு, சில மாற்றங்களை பரிசீலித்து வருகிறது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார், பொதுமக்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவது மற்றும் ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்படும் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) இந்த மசோதாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா அல்லது கையாளப்பட வேண்டுமா என்பது குறித்தும் அடங்கும். இதனால், திட்டமிட்டபடி, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சி அறிமுகப்படுத்தப்படாமல் போகலாம் என்று அவர் கூறினார்.
உலகளவில் கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை இன்னும் உருவாகி வருவதால், இந்தியா இதில் அவசரப்படக்கூடாது, ஆனால் பரந்த ஆலோசனையுடன் கிரிப்டோக்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் அந்த அதிகாரி கூறினார். “இது நாணயம் என்பதால், இது ரிசர்வ் வங்கி சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படலாம்,” என்று அதிகாரி அரசாங்கத்தின் சிந்தனையை விளக்கினார்.
கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்தின் ஒழுங்குமுறை மசோதா, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் பட்டியலிடப்பட்டுள்ளது, கடந்தமுறை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் கிரிப்டோ பட்டியலிடப்பட்டது, ஆனால் அதற்கான கொள்கை முடிவை அரசாங்கம் மீண்டும் உருவாக்க முடிவு செய்ததால் அறிமுகப்படுத்த முடியவில்லை.
மத்திய அரசு, கிரிப்டோகரன்சிகளை மேற்பார்வையிட செபியை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது, ஏனெனில் இவற்றை நிதிச் சொத்துகளாக அரசாங்கம் கருதுகிறது. மற்றொன்று கிரிப்டோ வைத்திருப்பவர்கள் தங்கள் சொத்துக்களை அறிவிக்கவும், புதிய விதிகளை சந்திக்கவும் காலக்கெடுவைக் கொடுத்தது. இந்த மசோதாவில் கிரிப்டோகரன்சிஸ் என்பதற்கு பதிலாக ‘கிரிப்டோஅசெட்ஸ் என்று வகைப்படுத்தப்படும். கிரிப்டோ விதிகளை மீறும் பட்சத்தில் 1.5 ஆண்டு சிறைவாசமோ அல்லது 20 கோடி ரூபாய் அபராதமோ விதிக்கப்படலாம் என்ற ஆலோசனை நடைபெறுவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.