கிரிப்டோ கரண்சி – தடை செய்ய ரிசர்வ் வங்கி பரிந்துரை!
தொடர்ந்து கிரிப்டோ கரண்சி தொழிலில் ஈடுபட்டு இருக்கும் நிறுவனங்கள் திவால் ஆவது, மூடப்படுவது என சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் படி, கிரிப்டோ கரன்சியை தடை செய்ய ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கேள்விக்கு மக்களவையில் பதில் அளித்த அவர், கிரிப்டோ கரன்சி எல்லையற்றதாக இருப்பதால், இந்தியாவில் மட்டும் அதற்கு தடை விதித்தால் முழுமையான பலன் கிடைக்காது என்றார். கிரிப்டோ கரன்சியின் வகைகள், நன்மை மற்றும் தீமைகள் தொடர்பாக ஆராய்ந்து, உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு விரும்புவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்தியாவில் புதிய டிஜிட்டல் கரண்சி அறிமுகம் செய்யப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கிரிப்டோ கரண்சிக்கே தடை விதிக்க வேண்டும் என்ற நிலையை எட்டி இருப்பதாக தெரிகிறது.