கிரிப்டோவும், டிஜிட்டல் தங்கமும் ! மாறும் கணக்குகள் !
இந்திய நிதி அமைச்சகம், இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகியவை டிஜிட்டல் தங்கத்தை, கிரிப்டோ கரன்சியோடு சில ஒழுங்குமுறை மேற்பார்வையின் கீழ் கொண்டு வர முயற்சி செய்வதாகத் தெரிகிறது, முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்கக் கட்டுப்பாடற்ற சொத்துக்களில் சில நிறுவனங்கள் அளித்த வெளிப்படைத்தன்மை, உறுதியற்ற நிலைப்பாடுகள் மற்றும் பொருந்தாத வாக்குறுதிகள் ஆகிய சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
திட்டத்தின் ஒரு பகுதியாக, டிஜிட்டல் தங்கத்தை ஒரு பாதுகாப்பு சொத்து என்று வகைப்படுத்த செபி சட்டம் மற்றும் பத்திரங்கள் ஒப்பந்தங்கள் ஒழுங்குமுறை சட்டத்தில் அரசு திருத்தம் செய்யலாம் என்று இந்த விஷயத்தை நேரடியாக அறிந்த இரண்டு அதிகாரிகள், பெயர் குறிப்பிடாமல் தெரிவித்தனர். கிரிப்டோகரன்சிகளின் பரிவர்த்தனைகள் மற்றும் அவற்றை சொத்தாக அங்கீகரிப்பதற்கான நீண்டகால திட்டங்களைத் தீர்மானிப்பது குறித்து ஒழுங்குமுறை அதிகாரிகளுடனான கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தலைமை தாங்கினார்.
கிரிப்டோகரன்சி மட்டுமல்லாமல், டிஜிட்டல் தங்கத்துக்கு சில நெறிமுறைகளை உருவாக்குவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டிருப்பது, முதலீட்டு ஒழுங்குகளில் என்னவிதமான பாதிப்புகளை உருவாக்கும் என்பதை விரைவில் அறிய முடியும்.