கனிம உற்பத்தி உயர்வு.. ஜனவரியில் 14.2% அதிகரிப்பு..!!
இந்தியாவின் கனிமங்கள் உற்பத்தி நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய சுரங்க பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுரங்கம் மற்றும் குவாரிகள் துறைக்கான கனிம உற்பத்தி குறியீடு நடப்பு நிதியாண்டின் ஜனவரி மாதத்தில் 124.7-ஆக இருந்ததாக தெரிவித்துள்ளது. இது கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, 2.8% அதிகம். 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022 ஜனவரி மாதம் வரையிலான 10 மாதத்தில், ஒட்டுமொத்தமான கனிமங்களின் உற்பத்தி 14.2% அளவுக்கு அதிகரித்துள்ளது.
நிலக்கரி உற்பத்தி 8.2% அதிகரித்து 796 லட்சம் டன்னையும், தங்கத்தின் உற்பத்தி 13.3% உயர்ந்து 107 கிலோவாகவும் உள்ளது.
இதேபோல் இயற்கை வரிவாயுவின் உற்பத்தி 11.7 சதவீதமாக உயர்ந்து 2,767 மில்லியன் கியுபிக் மீட்டராக இருந்தது. கச்சா பெட்ரோலியத்தின் உற்பத்தி 2.4% குறைந்து 25 லட்சம் டன்னாகவும் காணப்பட்டது.
பாக்சைட் உற்பத்தியை பொறுத்தவரை 13.4 சதவீதம் அதிகரித்து 2,157,000 டன்னாகவும், குரோமைட் கனிமத்தின் உற்பத்தி 17.6% குறைந்து 3,98,000 டன்னாகவும் காண்ப்பட்டன.
தாமிரத்தின் உற்பத்தி 10 ஆயிரம் டன்னாகவும், இரும்புத்தாதுவின் உற்பத்தி 215 லட்சம் டன்னாகவும் இருந்தது.
மாங்கனீஷின் உற்பத்தி 10% குறைந்துள்ளது. இந்த விவரங்கள் இந்திய சுரங்க பணியகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.