சிலிண்டர் விலை சரிவு
இந்தியாவில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் குறைந்துள்ளது. சர்வதேச விலை நிலவரத்துக்கு தகுந்தபடி ஒரு சிலிண்டர் அதிகபட்சமாக சில மாநிலங்களில் 100ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. அதே நேரம் விமான எரிபொருள் அல்லது atfஎனப்படும் எரிபொருள் விலை 8.5%வரை உயர்ந்துள்ளது. இந்த உயர்வு என்பது ஒரு மாதத்தில் நடக்கும் இரண்டாவது உயர்வாகும். சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்றபடி கச்சா எண்ணெய் மற்றும் விமான எரிபொருள் விலை மாறி வருகிறது. விமான எரிபொருள் என்பது ஆயிரம் லிட்டருக்கு 7,728.38 ரூபாய் அதிகரித்துள்ளது.தலைநகர் டெல்லியில் இந்த எரிபொருள் ஒரு கிலோ லிட்டர் 98,508 ரூபாயாக உயர்ந்துள்ளது. மாநிலத்துக்கு மாநிலம் இந்த பொருட்களின் விலை மாறுபடும்.மாநிலத்துக்கு மாநிலம் வாட் வரி மற்றும் உள்ளூர் விற்பனை வரியும் மாறுபடும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். கடந்த ஜூலை 1ஆம் தேதி விமான எரிபொருள் விலை 1.65 விழுக்காடு உயர்ந்திருந்தது.இந்த விலையேற்றத்துக்கு முன்பு 4 முறை விலை குறைக்கப்பட்டது. தலைநகர் டெல்லியில் 19 கிலோ வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 1,680 ரூபாயாக விற்பனையாகிறது. கடந்த மார்ச் மாதம் சவுதி காண்ட்ராக்ட் விலை சமையல் எரிவாயுவுக்கு சரிந்தது. அதன்பிறகு சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படவே இல்லை. இதன் விளைவாகத்தான், சமையல் எரிவாயு விலை உயராமல் இருக்கிறது.