அடடே!!! ஆச்சரிய குறி!!!!!
பெரிய நகரங்களில் அமர்ந்துகொண்டு 5ஜி சேவையை பெற்றுக் கொண்டு, அதுவும் வேகமாக இல்லை என்று புலம்புவோரா நீங்கள்??? இன்னும் செல்போன் சேவை கூட கிடைக்காத கிராமங்கள் இந்தியாவில் இருக்கத்தான் செய்கின்றன. இந்த சூழலில் பொதுத்துறை செல்போன் நிறுவனமான பிஎஸ்என்எல், அடுத்த ஓராண்டில் அனைத்து கிராமங்களிலும் அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இது தொடர்பாக தொலைதொடர்புத்துறை செயலர் ராஜாராமன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர்,பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த போதுமான ஏற்பாடுகள் செய்துள்ளாக தெரிவித்தார் , ஆக்டிவ், மற்றும் பேசிவ் வகைகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த உள்ளதாக கூறிய அவர் இதற்காக ஒப்பந்ததாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 2017ம் ஆண்டு டிஜிட்டல் பேமண்ட் குறைந்த அளவில் இருந்ததாக கூறியுள்ள ராஜாராமன், 2021-ல் சீன மக்கள்தொகையைவிட இருமடங்கு அதிக டிஜிட்டல் பேமண்ட் செய்யப்படுவதாக கூறினார். பாரத் நெட் திட்டத்தின் மூலம் இந்தியாவின் 1லட்சத்து 90 ஆயிரம் கிராமங்களை இணைக்கப்பட்டுள்ளதாகவும்,அடுத்தாண்டில் 2 லட்சத்து 20ஆயிரம் கிராமங்களை இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மொத்தம் 6 லட்சம் கிராமங்கள் இணைய வசதியில் இணைய இருக்கின்றன. பள்ளங்கள் தோண்டி, அதனால் தொலைதொடர்பு கம்பிகள் சேதமாவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.