காஞ்சிபுரத்தில் உருவாகும் தகவல் மையம்! தமிழக அரசுடன் லார்சன் டூப்ரோ ஒப்பந்தம்!
தரவு தகவல் மையம் அமைப்பது தொடர்பாக லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் காஞ்சிபுரத்தில், 90 மெகவாட் திறன் கொண்ட தகவல் தரவு மையம் ஒன்றை (டேட்டா சென்டர்) தொடங்கவுள்ளதாக லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தரவுத் தகவல் மையம் மல்டி கிளவுட் சேவை மையமாகவும், டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன், ஒருங்கிணைப்பு டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட சேவைகளையும் வழங்குவதோடு, இதன் மூலம் 600 பேர் நேரடியாகவும், 500 பேர் மறைமுகமாகவும், மொத்தம் 1,100 பேர் வேலை வாய்ப்பினை பெறுவர் என்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.