டீசல் பயன்பாடு சரிவு..
இந்தியாவில் மாதந்தோறும் எவ்வளவு எரிவாயு பயன்படுத்தப்படுகிறது என்ற புள்ளி விவரம் வெளியிடப்படுவது வழக்கம். கடந்த மாதத்தின் புள்ளி விவரம் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பரில் டீசல் பயன்பாடு 3%சரிந்துள்ளதாகவும், பெட்ரோல் பயன்பாடு 5%உயர்ந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டீசல் என்பது இந்தியா பயன்படுத்தும் மொத்த எரிவாயுக்களில் 5-ல் இரண்டு பங்கு என்று கூறுகிறது பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் ஒன்று. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 5.99 மில்லியன் டன் அளவுக்கு இந்தியாவில் டீசல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் கடந்த செப்டம்பரில் 5.81மில்லியன் டன் அளவுக்கு மட்டுமே டீசல் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பருவமழை பொய்தததை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பல இடங்களில் மழையே இல்லாததால் மக்கள் விவசாய பணிகளுக்கும், தொழிற்சாலை பணிகளுக்கும் டீசலை வாங்குவது குறைந்திருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. சில இடங்களில் அதிக மழை பெய்தபோது வாகனங்கள் நகர முடியாத அளவுக்கு இருந்ததால் அங்கு டீசல் பயன்பாடு குறைந்ததையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இதற்கு நேர் எதிராக பெட்ரோல் விற்பனையும்,மக்கள் பயன்பாடும் செப்டம்பரில் 5.6%அதகரித்துள்ளது.இந்தியாவில் விமான போக்குவரத்து மீண்டும் கொரோனாவுக்கு முன்பு இருந்த அளவுக்கு நடப்பதாலும், பொருளாதார நடவடிக்கைகள் மீண்டு வருவதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் ஒருநாளைக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய் இந்தியாவில் பயன்படுத்தப்படுவதாக எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளான ஓபெக் நாடுகளின் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜெட் விமான எரிபொருள் பயன்பாடு 7.5% உயர்ந்துள்ளதாகவும், சமையல் எரிவாயு பயன்பாடு கடந்தாண்டை விட 6% உயர்ந்திருக்கிறது. கொரோனாவுக்கு முன்பு இருந்ததைவிட 23.3 விழுக்காடு அளவுக்கு வீட்டு உபயோக சமையல் எரிவாயு பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.