பங்குச்சந்தைகளில் சரிவு..!!!
ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்திய சந்தைகளில் பெரிய சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்நச்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 180 புள்ளிகள் சரிந்து 65,252 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது.தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 57 புள்ளிகள் சரிந்து 19,386 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. உலகளவில் நிலவி வரும் பிரச்னைகளுக்கு மத்தியில் இந்தியாவில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கின.முதல் பாதியில் உயர்ந்த பங்குச்சந்தைகள், இரண்டாவது பாதியில் பெரிதாக சரிந்தன. Reliance Industries, Grasim Industries, ONGC, Power Grid Corp,JSW Steelஆகிய நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.BPCL, Asian Paints, IndusInd Bank, Infosys,Britannia Industriesஉள்ளிட்டத்துறை பங்குகள் ஏற்றம் கண்டன. ஆட்டோமொபைல்,பொதுத்துறை வங்கிகள்,மருந்து மற்றும் உலோகம் உள்ளிட்டத்துறை பங்குகள் 0.3 முதல் 0.7 விழுக்காடு சரிவை சந்தித்தன. தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் அரை விழுக்காடு ஏற்றம் கண்டது. Federal Bank, Axis Bank, Mphasis, South Indian Bank, Welspun India, BEML, Genus Power Infrastructures, Polycab India, Varroc Engineering, Texmaco Rail & Engineering, Larsen & Toubro, SMS Pharmaceuticals, Tata Power, Titagarh Rail Systems, Suzlon Energy, Tata Communications, Escorts Kubota, Ircon International உள்ளிட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து 43 ஆயிரத்து 840 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 14 ரூபாய் விலை உயர்ந்து 5480 ரூபாயாக உயர்ந்துள்ளது.வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 80 ரூபாயாக விற்பனையானது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரத்து 500 ரூபாய் அதிகரித்து 80 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நடுத்தர மக்களை கவலை கொள்ளச் செய்திருக்கிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலையுடன் 3 விழுக்காடு கட்டாயம் ஜிஎஸ்டி சேர்க்கப்பட வேண்டும் ,இதேபோல் செய்கூலி,சேதாரமும் சேர்க்கப்பட வேண்டும், ஆனால், செய்கூலி, சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறைவான செய்கூலி, சேதாரத்தில் நகைகள் எடுக்க சிறந்த கடை எது என்பதை தேர்வு செய்வது நமது கைகளில்தான் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்…