பங்குச்சந்தைகளில் சரிவு..
இந்திய பங்குச்சந்தைகள் டிசம்பர் 29 ஆம் தேதி, சரிவுடன் முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 170 புள்ளிகள் சரிந்து 72,240 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 47 புள்ளிகள் சரிந்து 21,731 புள்ளிகளில் வணிகம் முடிந்தது. தேசிய பங்குச்சந்தையில் மிகப்பெரிய லாபமாக டாடா கன்சியூமர், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை சந்தித்தன.Bajaj Auto, Nestle India, Adani Enterprises,Britannia ஆகிய நிறுவனங்கள் லாபத்தை சந்தித்தன. பாரத் பெட்ரோலியம் நிறுவன பங்குகள் சரிவை கண்டன. SBI, ONGC,Infosysஆகிய நிறுவனங்கள் பெரிய சரிவை கண்டன. 1758 நிறுவன பங்குகள் உயர்ந்து முடிந்தன.1533 நிறுவன பங்குகள் சரிந்தன. 54 பங்குகள் எந்த மாற்றமும் இல்லாமல் வர்த்தகத்தை நிறைவுசெய்தன. ஒரு கிராம் தங்கம் முன்தின விலையைவிட 35 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 5910 ரூபாயாக இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் 47,280 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1ரூபாய் 30 காசுகள் குறைந்து 79 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிர்தது 300 ரூபாய் குறைந்து 79 ஆயிரத்து700 ரூபாயாக விற்கப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டி 3விழுக்காடும், செய்கூலி, சேதாரமும் சேர்க்கவேண்டும். இதில் செய்கூலி, சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நகை வாங்குவோர் கவனத்தில் கொள்க.