தாமதமாகும் ஜீ-சோனி இணைப்பு..
ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறையில் புகழ்பெற்று விளங்கும் ஜி மற்றும் சோனி நிறுவனங்கள் இணைந்து பணியாற்ற கடந்த 2021ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த இணைப்புக்கு இந்திய தேசிய நிறுவன சட்டத் தீர்பாயமும் இந்தாண்டு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் நிறுவனங்களை இணைப்பதற்கான எல்லா பணிகளையும் செய்து வருவதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.சில பணப்பரிவர்த்தனைகள் முடியும் என்று எதிர்பார்த்ததாகவும் ஆனால் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் அந்த பரிவர்த்தனைகள் முடியாது என்ற சூழல் இருப்பதாகவும் சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. சோனியுடன் இணைந்து பணியாற்ற இருப்பதால் ஜீ நிறுவனத்தின் பங்குகள் உலகளாவிய சந்தைகளில் இருந்து திரும்பப்பெறப்பட்டுள்ளன. எப்போது இந்த பணிகள் நிறைவடையும் என்று உறுதியான தேதியை இருநிறுவனங்களும் அறிவிக்கவில்லை,ஜீ மற்றும் சோனி நிறுவனங்கள் இணைவதை ஆக்சிஸ் பைனான்ஸ் நிறுவனமும்,ஐடிபிஐ வங்கிகளும் விரும்பவில்லை என்று தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான புனீத் கோயன்கா மீது பல்வேறு நடவடிக்கைகள் இருக்கும் நிலையில் சோனியுடன் இணைய கூடாது என்று வங்கிகள் முறையிட்டுள்ளன.