மின்சார வாகனத்தின் டெலிவரி!!!
மோரிஸ் கராஜ் என்ற பிரபல நிறுவனம் , பல ஆண்டுகளாக கார் உற்பத்தியில் உலகளவில் கொடிகட்டி பறந்து வருகிறது. இந்த நிலையில் mgநிறுவனம் தனது காமெட் என்ற ரக புதிய மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ், பிளே, பிளஸ் என்ற 3 வகைகளில் இந்த வகை காமெட் ரக கார்கள் கிடைக்கின்றன. 7.98 லடசம் ரூபாய்க்கு தொடங்கும் பேஸ் ரக கார்கள்,பிளே 9.28லட்சம் ரூபாயும்,9.98 லட்சம் ரூபாய்பிளஸ் ரக கார்களுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாடா டியாகோ, சிட்ரியான் ஈசி3 ஆகிய கார்களுக்கு போட்டியாக சந்தையில் களமிறங்கியுள்ள கார்கள்தான் காமெட். 3 மீட்டர் உயரம் கொண்ட இந்த கார்கள் 17.3 கிலோவாட் பேட்டரி இந்த வாகனத்தின் சிறப்பம்சம். ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த காரை 230 கிலோமீட்டர் தூரம் வரை இயக்க முடியும் என்கிறது எம்ஜி நிறுவனம். அதிகபட்சமாக இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகம் செல்லக்கூடியது. 10.25 அங்குல தொடுதிரை இன்போசிஸ்டமும் உள்ளது. வெள்ளை, கருப்பு,சில்வர் ஆகிய நிறங்களில் இந்த ரக கார்கள் சந்தையில் கிடைக்கின்றன. பச்சையும் கருப்பும் கலந்த நிறமும், வெள்ளையும் கருப்பும் கலந்த நிறத்திலும் கிடைக்கும் வகையில் இவ்வகை கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த வகை கார்கள் இனி ஆர்டர் செய்தால் சிலநாட்களுக்குள் கிடைத்துவிடும் வகையில் ஆர்டர்கள் பெறப்படுகின்றன.