ஹோம் இண்டியர்ஸ் கம்பெனியில் முதலீடு செய்யும் தோனி; கேப்டன் கூலின் பிளான் என்ன?
ஹோம் இன்டியர்ஸ் கம்பெனியின் ஹோம்லேனும் (HomeLane), கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியும் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்துள்ளனர். ஹோம்லேனில் பங்கு வைத்துக் கொள்வதோடு அதன் முதல் பிராண்ட் அம்பாசிடராகவும் தோனி இயங்குவார். இந்த டீல் மூன்று வருடம் வரை தொடரும். ஆனால் அவர் எவ்வளவு முதலீடு செய்தார் என்பது தெரியவில்லை.
ஹோம்லேன் புதிய சந்தைகளில் நுழைய விருப்பம் கொண்டிருக்கிறது. கிளைகள் இருக்கும் 16 நகரத்திலும் அதன் செயல்பாடுகளை மேம்படுத்தவும் திட்டமிடுகிறது. தோணியுடனான இந்த ஒப்பந்தம் நாங்கள் வளர மேலும் உதவும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
ஹோம்லேன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 25 இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் காலடி வைக்க ஆவலாக இருக்கிறது. இதற்காக, 100 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.
2014 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட ஹோம்லேன் கடந்த நிதியாண்டின் முடிவில் 230 கோடி வருவாய் ஈட்டியிருந்தது. ஹோம்லேன் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா, புனே, கோவை, விசாகப்பட்டினம், மைசூரு மற்றும் பல இடங்களில் உள்ளது.